நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
நேற்று திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி முதல் நாளில் 24 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளான் கர்ணன். இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.