நெல்லையில் உடல் ஊனமுற்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உடல் ஊனமுடைய கொம்பம்மாள் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு சில மாதங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கொம்பம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.