மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய , முதல் வீரர் என்ற சாதனைய ஹர்சல் பட்டேல் படைத்துள்ளார்.
14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது , நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆர்சிபி அணியின் பவுலிங் செய்த வேகப்பந்து வீச்சாளரான ஹர்சல் பட்டேல் சிறப்பாக பந்து வீசினார் .இவர் 4 ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் பந்து வீசிய 16வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவை ஆட்டமிழக்க செய்தார்.
இதைத்தொடர்ந்து இஷான் கிஷனை 18-வது ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார். ஹர்சல் பட்டேல் இறுதி ஓவரில் பந்து வீசி ,குருணல் பாண்ட்யா, மார்க்கோ ஜேன்சென், கீரன் பொல்லார்டு ஆகிய மூவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இவர் வீசிய முதல் 2 பந்துகளில், குருணல் மற்றும் பொல்லார்டு ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய ஜேன்செனை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் ,ஆர்சிபி அணி மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.