Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு வேலைக்கு போனேன்…. எனக்கும் அது வந்துருச்சு…சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டிரைவர் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். போலீசாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஞானசேகர் பணி மாறுதலில் இன்ஸ்பெக்டராக ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார். இதனையடுத்து ஞானசேகரின் கார் டிரைவராக பணியாற்றும் குமார் என்பவருக்கும் சோதனை செய்த போது  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலையே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Categories

Tech |