நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மதத்தலைவர்களுடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று கோவில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.