மும்பையில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2021 ஐபிஎல் சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர் . நேற்று நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் ,ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ,மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது.குறிப்பாக டி வில்லியர்ஸ், ஹர்சல் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .
இன்று 14வது ஐபிஎல் தொடரின், 2வது லீக் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. போட்டிக்காக முதலில் டாஸ் போடப்பட்டதில் ,டெல்லி கேப்பிடல்ஸ் அணி , டாஸை வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.இந்த போட்டியானது இளம் வீரர்களுக்கும் ,அனுபவமுள்ள வீரர்களுக்கும் இடையே நடக்கும் போட்டியாக காணப்படுகிறது .