பிரித்தானியாவின் மகாராணியார் இளவரசர் பிலிப்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் நேற்று இயற்கை எழுதியுள்ளார். இந்நிலையில் பிரித்தானியா மகாராணியார் தனது காதல் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தின் பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது “இத்தனை ஆண்டுகளாக அவர்தான் எனது பலமாக இருந்து வந்துள்ளார். எனது குடும்பமும் நானும் இந்த நாடும் அவருக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வார்த்தைகளின் அர்த்தமானது 73 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருந்த இந்த தம்பதிகள் மகாராணியாரின் 99வது வயதில் இளவரசர் பிலிப் இயற்கை எய்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே மகாராணியார் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னதாக 1953ஆம் ஆண்டு மகாராணியார் பதவியேற்றுக் கொண்டபோது இளவரசர் பிலிப் பேசியதாவது நான் மகாராணியாரின் வலதுகரமாக இருந்து செயல்படுவேன் எனவும் அவரை பாதுகாப்பேன் எனவும் உறுதி ஏற்றுக் கொண்டார். அதேபோல் அவர் ஒரு நல்ல துணைவராக தன்னுடைய மரணம் வரை மகாராணியாருக்கென்றே தன் வாழ்வை தந்து வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.