பாகிஸ்தானில் ஒரு இளைஞன் பப்ஜி விளையாட்டினால் தனது குடும்பத்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் நாவாகாட் பகுதியில் பிலால் எனும் சிறுவன் வசித்து வருகிறார். அவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை பப்ஜி விளையாடாமல் தடுத்துள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த இளைஞன் விளையாட்டில் ஹெல்மெட் மற்றும் உடைகளை அணிந்தபடி துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த அவரது சகோதரன், அண்ணி, சகோதரி மற்றும் நண்பர் ஆகிய 4 பேரையும் சுட்டுக் கொலை செய்துள்ளார். துப்பாக்கியின் சத்தம் கேட்டு அருகிலிருந்த பக்கத்து வீட்டினர் வந்து பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் பிலாலை கைது செய்தனர்.
இந்த காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் பிலால் ஐஸ்(ice) எனப்படும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் விசாரணையில் 4 கொலைகளையும் செய்ததாக ஒப்புக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இளைஞர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் பப்ஜி விளையாட்டை தடை செய்தது. பின்னர் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.