மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி இவர் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலையை சொல்லித் தருபவராக அவருடைய கதாபாத்திரம் உள்ளது. இந்த படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த படம் ஜாதி சம்பந்தப்பட்ட படம் கிடையாது. கூத்துக் கலைஞர்கள், போலி காதல், மதுவிலக்கு, விவசாயம் உள்ளிட்ட சம்பவங்கள் இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தன்னுடைய அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால் நிச்சயம் செய்வேன் என்றும் அதற்காக அம்மாவிடம் உரிய அனுமதியும் பெறுவேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடைய அப்பா புதைத்து வைத்த பணம் காட்டில் இருக்கிறது. ஆனால் தற்போது அது செல்லாது. அந்த பணம் இருக்கும் இடம் அப்பாவுக்கும் அவருடன் இருந்த கோவிந்தன் என்பவருக்கும் மட்டுமே தெரியும் என்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.