சேலம் மாவடத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை என்ன தலைவாசலிளிருகும் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டர் நேரில் சென்று உயர் அதிகாரிகள் பணியில் செயல் படுகிறார்களா மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டனர். அதோடு அங்குள்ள போலீசாருக்கு வாக்கு எண்ணும் மையத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளார்கள்.