Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்… நக்கல் செய்த பாடகி…. கடும் கோபத்தில் மக்கள்…!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை கேலி செய்யும் வகையில் ஒரு பெண் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பிரபல பெண் பாடகி லில்லி அல்லன். அவர் பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீட்டிற்குள் குழந்தை நுழைய முயற்சி செய்வதும் அதை வீட்டுக்குள் வரக்கூடாது என ஒரு பெண் கதவை மூடுவது போலவும் அதற்கு அந்த குழந்தை கதறி அழுவது போலவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளவரசர் பிலிப் சொர்க்கத்திற்கு செல்லும் போது இளவரசி டயானா இப்படிதான் செய்வார் என்று கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/i/status/1380519461476839426

இந்த கருத்து மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் ஒரு குடும்பம் கண்ணீரில் தவிக்கிறது இப்படிப்பட்ட சமயத்தில் உனக்கு இந்த ட்வீட் தேவையா?என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு லில்லி ஓ! இளவரசர் இறந்து விட்டாரா என மீண்டும் கேலி செய்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து மக்கள் லில்லிக்கு எதிராக விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் பிரிட்டன் அரசை அவமதிக்கும் வகையில் தொடர்து ட்வீட் செய்து வருகிறார்.

Categories

Tech |