Categories
சினிமா தமிழ் சினிமா

கடை திறப்பு விழாவுக்கு சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி… கூட்டமாக கூடிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி கடை திறப்பு விழாவுக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடைய உள்ளது. முதல் சீசனை விட இந்த சீசன் அதிக அளவு பிரபலமடைந்துள்ளது. மேலும் இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சிவாங்கி கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். மேலும் ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே நின்று சிவாங்கி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது சிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |