Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரியாமருதுபட்டி கிராமத்தில் மணிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் (5) என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் கடந்த 5-ம் தேதி தனது தாய் கவிதாவுடன் வயலுக்கு சென்றுள்ளான். அதன்பின் இரவு 7 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.

அப்போது அங்கு கிடந்த பாம்பு ஒன்று பிரவீன் குமாரை கடித்துள்ளது. அதன்பின் சிறுவன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இந்த சம்பவம் குறித்து நெற்குப்பை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |