சென்னையிலிருந்து 50 கிலோ தங்க நகைகளை ,கேரளாவிற்கு கடத்தி வந்த 2 வட மாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் .
சென்னையிலிருந்து நேற்று மங்களா ரயில் , கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களா ரயில் , இன்று காலை கோழிக்கோடு ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அந்த ரயிலில் பயணித்த 2 வடமாநில வாலிபர்கள் ரயில் நிலையத்திலேயே சுற்றித் திரிந்து உள்ளனர். இதனால் 2 வாலிபர்கள் மீது சந்தேகமடைந்த, அங்கிருந்த பாதுகாப்பு படை போலீசார் அவர்களை விசாரித்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ,அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட ,கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை தெரியவந்தது. அவர்கள் இருவரும் சென்னையில் இருந்து , 50 கிலோ தங்க நகைகளை கேரளாவிற்கு கடத்தி வந்துள்ளதாக உண்மையைக் கூறினர். இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்த 50கிலோ நகைகளை , ஜி.எஸ்.டி அதிகாரிகளிடம், ஒப்படைத்தனர். கேரளாவில் ரயிலில் 50 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.