நெல்லையிலிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்பாக பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் காரையாரிலிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோயிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு அக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவருக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே கோவிலில் இருக்கும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு நறுமண பொருட்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பாபநாசத்திலிருந்து காரையாருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.