Categories
தேசிய செய்திகள்

இனி அலைய வேண்டாம்…. வெறும் 10 நிமிடம் போதும்…. பான் கார்டு உங்க கையில இருக்கும்…!!!

பான் கார்டு என்பது இப்போது அனைவருக்குமே அவசியமாகிவிட்டது. மேலும் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பு என்பது மிகவும் அவசியம். இதன் மூலமாக வருமான வரி கணக்குகளை மத்திய அரசு எளிதில் அறிவதற்காக பான் கார்டு உதவுகிறது. வங்கி கணக்கில் கூட பான் கார்டு இணைப்பு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு வாங்குவதற்கு பல இடங்களில் அலைய வேண்டியது இருக்கிறது. மேலும் விண்ணப்பித்தாலும் வருவதற்கும் கால அவகாசம் எடுக்கிறது. இந்நிலையில் பான் கார்டை பத்து நிமிடங்களில் பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

e-pan பெற முதலில் வருமான வரித்துறையின் இ-பைலிங்(e-filling) என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். முழு செயல்பாடும் முடிந்த பிறகு 15 இலக்க பதிவு எண் உருவாக்கப்படும். அதன் பிறகு உங்களுடைய கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 நிமிடங்களில் உங்களுக்கு e-pan கிடைத்துவிடும்.

Categories

Tech |