நெல்லையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிகழ்கிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 100°யை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இதற்கிடையே மதிய வேளையில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அனல் காற்று வீசுவதால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இந்த நிலையில் தற்போது நெல்லையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இந்த மழை பொழிவின் மூலம் குளிர்ந்த சூழ்நிலை உண்டானதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.