இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் பல மோசடிகள் நடக்கின்றன. பெரிய அளவிலான மோசடிகளும், சிறிய அளவிலான மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் மதுபாட்டில்கள் வாங்க வருபவர்களிடம் விற்பனையாளர் ஒருவர் பாட்டில் ஒன்றிற்கு கூடுதலாக ரூபாய் 5 வசூலித்து உள்ளார்.
இதையடுத்து மது வாங்க சென்றவர் கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள் என்று நெல்லை மண்டல டாஸ்மாக் மேலாளரிடம் செல்போனில் புகார் அளித்ததை அடுத்து அந்த விற்பனையாளருக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததற்காக ரூ.5480 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.