வின்ட்சர் கோட்டையில் இளவரசர் பிலிப்பின் இறுதி நிமிடத்தில் நடந்தவை குறித்து அரண்மனை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் பிலிப் நேற்று வின்ட்சர் கோட்டையில் காலமானார். இவர்தான் வரலாற்றிலேயே அதிக காலம் இளவரசராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் பிலிப் தனது கடைசி நாட்களை மகாராணியாருடன் கழித்துள்ளார். மேலும் தனக்கு பிறகு எப்படி வழி நடத்த வேண்டும் என்பது குறித்தும் மகாராணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே தனது 4 பிள்ளைகளையும் தனித்தனியாக அழைத்து நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
ஆனால் அவரால் இளவரசர் வில்லியத்தை சந்திக்க முடியவில்லை. மேலும் பேரப்பிள்ளைகளையும் கொள்ளு பேரப்பிள்ளைகளையும் பார்க்க முடியவில்லை என்பது அவருக்கு வருத்தமளித்துள்ளது. தனது வீட்டிலேயே இறக்க வேண்டும் என்பது இளவரசர் பிலிப்பின் இறுதி ஆசையாக இருந்துள்ளது. கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு பிலிப்பின் உடல்நிலை மோசமடைந்த போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மகாராணியார் பிலிப்பின் ஆசை நிறைவேறவேண்டும் என்பதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என நிராகரித்துவிட்டதால் பிலிப் தனது ஆசைப்படி 9ஆம் தேதி காலை தனது வீட்டில் உள்ள தனது படுக்கை அறையில் இயற்கை எழுதியுள்ளார். இளவரசர் பிலிப் தனது படுக்கை அறையில் இரண்டு புகைப்படங்களை வைத்திருப்பாராம். அதில் ஒன்று தனது மனைவியுடையதும் மற்றொன்று தனது தாய் உடையதாகும் என அரண்மனை வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.