Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 10 நாட்களுக்கு… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் நாளை முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

Categories

Tech |