Categories
உலக செய்திகள்

இரை தேடிக் கொண்டிருந்த குஞ்சுகள்…. இரையாக்க நினைத்த பருந்து…. தாய்க்கோழி கொடுத்த பதிலடி…. வைரலாகும் வீடியோ….!!

தாய்க்கோழி தனது குஞ்சுகளை இரையாக்கி கொள்வதற்காக வந்த பருந்தை தாக்கி கொலை செய்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு தாய்க்கு தனது பிள்ளைகள் அனைவரின் பாதுகாப்பும் மிக முக்கியமானது. தன்னுடைய பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் அவர்களை காப்பாற்றுவதற்காக தாய் எந்த எல்லைக்கு வேண்டுமாலும் செல்லுவார்கள் என்பது உண்மை. அதுபோல இங்கு ஒரு கோழி தனது குஞ்சுகளுடன் இரை தேடிக் கொண்டிருக்கும்போது வானில் இருந்து பறந்து வந்த பருந்து ஒன்று அந்தக் குஞ்சுகளை இரையாக்க நினைத்து உள்ளது.

https://www.facebook.com/Kaannal.official/videos/294260922138554/?t=0

அந்த சமயத்தில் தாய்க்கோழி ஆத்திரமடைந்து தன்னுடைய குஞ்சுகளை காப்பாற்றுவதற்காக பருந்தினை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் முடிவில் தாய்க்கோழி பருந்தை தனது காலுக்குள் வைத்துக்கொண்டு அதன் ரெக்கையை உடைத்து கொன்ற பிறகு தனது ஆவேசத்தை தீர்த்துக் கொண்டுள்ளது. இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |