பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இளவரசர் பிலிப் மறைவுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்கும் பிரித்தானிய மக்களுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி இயற்கை எய்தியுள்ளார். இவரின் மறைவுக்காக உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது “இளவரசர் பிலிப் இறந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் மகாராணியான இரண்டாம் எலிசபெத்க்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அரச குடும்பத்தினருக்கும் பிரித்தானியா மக்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இளவரசர் பிலிப் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இவர் தனது கடமையாலும் வீரத்தாலும் இளைஞர்கள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் போன்றவற்றிற்காக தன்னுடைய வாழ்வை தந்து சிறந்த மனிதராக வாழ்ந்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.