கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த வருடம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. கடந்த 6-ஆம் தேதி ஒரே நாளில் 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட தற்போது வேகமாக பரவி வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதில் அடுத்த நான்கு வாரங்கள் முக்கியமானது என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், கூடுதல் வசதிகள் கொண்ட படுக்கைகள் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்காக ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் முக கவசம் அணிந்து கட்டாயம் செல்ல வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.