ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்கும் காட்சி இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதேபோல இப்படத்தை தெலுங்கில் வக்கீல் ஷாப் என்ற தலைப்பில் இயக்கியுள்ளனர்.
பவன் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முன்னணி நடிகரின் திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. இந்நிலையில் திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரை அடித்து உடைத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
https://twitter.com/revathitweets/status/1380424075986661377