Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓட்டு போட சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் சீக்கியவர் கைது..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் ரூ.65 ஆயிரம் பணம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அய்யனார்புரம் பகுதியில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னிஷியனாக திருமயம் பெல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் தோமையார் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலன்று ஓட்டு போடுவதற்காக குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன் பின் இரண்டு தினங்களுக்கு முன்பு காரைக்குடிக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது அங்கு வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு நிலையில் இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அப்போது பீரோவில் இருந்த ரூ. 65 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆரோக்கியதாஸ் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஆரோக்கியதாஸ் வீட்டின் அருகில் வசிக்கும் பொன்னையா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 40,000 பணத்தை கைப்பற்றினர்.

Categories

Tech |