Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… நாளை பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருந்தது போலவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி நாளை பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கொரோனா பாதிப்பு 6000-ஐ நெருங்கும் நிலையில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |