Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவடையும் குக் வித் கோமாளி…. அஸ்வினின் உருக்கமான பதிவு…. ரசிகர்கள் வருத்தம்…!!!

குக்  வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கான போட்டி ஒளிபரப்பாக உள்ளது.

இந்த கடைசி சுற்றிற்கு பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா, ஷகிலா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குக் வித் கோமாளி பயணம் குறித்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ள அனைத்து டெக்னீஷியன்கள், இயக்குனர்கள், நடுவர்கள், சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் என அனைவரைப் பற்றியும் பெருமையாக பதிவிட்டுள்ளார். குறிப்பாக சிவாங்கியை மிஸ் செய்யப்போவதாகவும் பதிவிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

https://www.instagram.com/p/CNb3Qw8DjGe/

Categories

Tech |