ஆவாரம் பூப்பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. இதைத் தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.
தேவையானவை:
ஆவாரம்பூ – 1 கப் (அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 250 மி. லி கேரட் – 1 பீன்ஸ் – 5 தக்காளி – 1 வெங்காயம் – சிறிது இஞ்சி – சிறிது பூண்டு – 2 பல் கொத்தமல்லி, புதினா – சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிறகாய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும்போது மசித்து அடுப்பை நிறுத்திச் சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.