Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்று முதல் டி20 போட்டி : இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதல்… ரசலுக்கு இடமில்லை..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.  

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 டி20 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.  முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல்  டி20 அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். கேப்டன் விராத்கோலிக்கும் ரோகித்துக்கும்  ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Image

இந்திய அணியில் ரோஹித், ஷிகர் தவான், விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய  4 பேர் வழக்கம் போல இடங்களை களமிறங்குகின்றனர்.  இளம் வீரர்களான நவ்தீப் சைனி, ராகுல் சாஹர், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் க்ருனால் பாண்டியா ஆகியோர் உள்ளனர். மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். விக்கெட் கீப்பர் தோனி  இல்லாததால் சற்று கூடுதல் பொறுப்பு ரிஷப் பண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Image result for andre russell

அதேபோல பிராத்வெயிட்  தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர்கள் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடி வீரர் பொல்லார்ட் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். ஆண்ட்ரே ரஸெலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஜாசன் முகமது சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவதற்கு வாய்ப்பில்லை. டி20 போட்டி என்று வந்துவிட்டாலே வெஸ்ட் இண்டீஸ் அணியினர் அதிரடியாக ஆடுவார்கள். இந்திய அணியும் இளம் படையுடன் களமிறங்குவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இருஅணி வீரர்களும்தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |