கொரோனாவை கட்டுப்படுத்தி தடுப்பதற்கு இனிமேல் களப்பணி தான் முக்கியம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி அவர்கள் மூலமாக பத்து பேருக்கு பரவாமல் தடுப்பது தான் ஒரே வழி. அதை தான் சென்னை மாநகராட்சி கடைபிடித்து வருகிறார்கள்.
எப்படி சென்னை மாநகராட்சி ஆணையர் அந்தந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறாரோ, அதே போல அனைத்து மாவட்ட ஆட்சியரும் களப்பணியில் ஆய்வு மேற்கொண்டு ,கோவிட் கேர் சென்டர் உறுதிப்படுத்துவது, ஆக்சிஜன் உறுதிப்படுத்துவது, தேவையான படுக்கை எண்ணிக்கை உறுதிப்படுத்துவது, தேவையெனில் கூடுதல் செவிலியர் பணி அமர்த்துவதற்கு நேரடியாக பணி அமர்வதற்கும் நாம் அந்த ஃப்ரீடம் கொடுத்திருக்கின்றோம்.
மாவட்ட அளவில் ஆர்வம் உடைய செவிலியர்களை வேலையில் சேர்த்துக்கொள்ளுங்கள். களப்பணி என்பதற்கு ஷார்ட்கட் கிடையாது. பீல்டு வொர்க் செய்து ஏறுமுகமாக இருக்கக்கூடிய கொரோனா பாதிப்பை கண்டுபிடித்து அவர்களுக்கு உள் சிகிச்சை செய்து அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாத முறையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.