இளவரசர் பிலிப்பின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் பத்திரமாக பாதுகாக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் கடந்த 9 தேதி காலமானார். இந்த சம்பவம் பிரித்தானியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பிரித்தானியா முழுவதும் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசரின் இறுதிச்சடங்கிற்கு பிறகு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படாது எனவும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இருக்கும் பெட்டகத்தில் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின்னரே இருவரது உடலும் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்படும் என அரண்மனை வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் உடல் ஜார்ஜ் சேப்பலில் இருக்கும் பெட்டகத்தில் பாதுகாக்கப்படுவது முன்பாக அரச குடும்பத்து மருத்துவர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சவப்பெட்டியில் வைத்து ஜார்ஜ் சேப்பலுக்கு கொண்டுசெல்லப்படும் என தெரியவருகிறது. இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசைக்கு மதிப்பளிக்கும் விதமாக 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்படும் எனவும் தெரியவந்துள்ளது.