கிராமத்து மணம் கமழும் கருவாட்டுக்குழம்பு மிக எளிதாக செய்யலாம் .
தேவையானபொருட்கள்:
கருவாடு – 100 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 4
மிளகு – 10
பூண்டு – 8 பல்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு- சிறிதளவு
வெந்தயம்-சிறிதளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கருவாட்டில் சிறிது வெந்நீர் ஊற்றி, நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,வெந்தயம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.பின்பு அதில் கருவாட்டையும் போட்டு அதன்பிறகு புளித் தண்ணீரை ஊற்ற வேண்டும். மிளகாய்த்தூள், உப்பு இரண்டையும் போட்டு கடைசியில் மிளகு, பூண்டு அரைத்து போட்டு குழம்பு காய்ந்ததும் இறக்கினால் சுவையான கருவாட்டுக்குழம்பு தயார் !!!