Categories
உலக செய்திகள்

19 பேருக்கு மரண தண்டனை…. கண்டனம் தெரிவித்த உலக நாடுகள்…. சொந்த மக்களை கொலை செய்யும் ராணுவம்….!!

மியான்மரில் இராணுவ உயர் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட 19 பேருக்கு மரண தண்டனை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் யாங்கன் நகரின் வடக்கு ஒக்காலப்பா மாவட்டத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி இராணுவ உயர் அதிகாரி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இராணுவ அறிவுறுத்தலின்படி இந்த கொலை வழக்கில் 19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதலை கண்டித்து அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ராணுவத்தால் 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இராணுவத்தின் தாக்குதலுக்கு உலகநாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மியான்மர் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் தங்கள் நாட்டிற்கு வர கூடாது என்று தடை விதித்தது. ஆனால் மக்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இராணுவத்துக்கு எதிராக பல புரட்சிக் குழுக்கள் தாக்குதல்களை தொடங்கியுள்ளனர். மேலும் முக்கிய தலைவர்கள் அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் உள்ளதால் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |