Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்குன்னு சொந்தமா அது மட்டும் தான் இருந்தது…. எல்லாமே நாசமா போச்சு…. திடீரென தீப்பிடித்த பேருந்து பட்டறை…!!

சேலம் மாவட்டத்தில் பஸ் பட்டறை தீடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பேருந்து பட்டறை ஒன்று கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென பேருந்து பட்டறை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பட்டறை உரிமையாளருக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டும் சுமார் ஒரு மணி நேரம் போராடிய பின்பே தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |