அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் விஷ்வாமித்ரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வதோதரா நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் வெள்ளத்தினால் ஆற்றிலிருந்த முதலை அடித்து வரப்பட்டு ஊருக்குள் புகுந்தது.வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் உலாவிய அந்த முதலை வெள்ளத்தில் மாற்றிக்கொண்டு அடைக்கலம் தேடிய நாயை கடித்து உணவாக்கிக் கொள்ள முயன்றது.
ஆனால் நூலிழையில் உயிர் தப்பிய நாய் தப்பிச்செல்ல வேறு வழியின்றி முதலைக்கு அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் வெள்ளத்தினால் அடித்து வரப்பட்ட அந்த முதலையை வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து பிடித்தனர். இந்த விடியோவானது தற்போது வலைதளைங்களில் வைரலாகி வருகின்றன.