Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்த ரவுடி… சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் …தஞ்சையில் பரபரப்பு…!!!

 ரவுடி ஒருவர் கும்பகோணத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து குளத்தில் குதித்ததால்  பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர் காலனியில் 30 வயதுடைய சிலம்பரசன் என்பவரின் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இதில்  திருமணமான சிலம்பரசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் . அங்கு அவர் மெக்கானிக் வேலை வேலை வருகிறார். இவர் மீது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம், போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்கு இருப்பதால் இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. அதனால் போலீசார் இவரை தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் சிலம்பரசன் தன் பெற்றோரைக் காண கும்பகோணத்தில் உள்ள  எம்.ஜி.ஆர் காலனிக்கு சென்றுள்ளார். இவர் அங்கு சென்ற செய்தி போலீசாருக்கு தெரியவந்ததால்  அவரை பிடிப்பதற்கு அவர்கள்  அந்த  இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த தகவலை அறிந்து கொண்ட அவர் காவல்துறையிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க எண்ணி வீட்டு பக்கத்தில் உள்ள குளத்தில் குதித்து  உள்ளார். ஆனால் அவரை போலீசாரும் விடாமல் துரத்தி சென்றுள்ளனர் . இருப்பினும் இரவு நேரம் என்பதால் போலீசாரால் அவரை  பிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அதே குளத்தில் வாயில் ரத்தம் வந்த நிலையில் சிலம்பரசன் பிணமாக கிடந்துள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளத்திற்கு விரைந்து வந்து அங்கு சிலம்பரசன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் ஒன்று கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அங்கு ஒன்று  கூடியுள்ள சிலம்பரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசார் அவரை துரத்தி சென்றபோது அவர் கிடைக்காததால் அவர்கள் வைத்திருந்த கட்டையால் சிலம்பரசனை தாக்கியுள்ளனர் என்றும்  அவரின் இறப்பிற்கு போலீசார் தான் காரணம் என்றும்  அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலம்பரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர். ஆனால் இதை மறுத்த போலீசார் சிலம்பரசன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளதால் அவரைத் தேடியது வழக்கமான நடவடிக்கை தான் என்றும், நாங்கள் அவரை தாக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் குளத்தில் விழுந்து இறந்துயிருக்கலாம்  என்றும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் தான்  உண்மையான காரணம்  தெரிய வரும் என்று போலீசார் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |