கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கி நடத்தினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி ஆகியோர் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சடகோபி என்பவர் வரவேற்றார்.
இதில் வாடிக்கையாளர்களை வர்த்தக நிறுவனங்களுக்கு கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து , உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். பேருந்தில் டிரைவர், கண்டக்டர், பயணிகள் என அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன் உட்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.