பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்பின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள தகவல்கள் அடங்கிய தொகுப்பு.
டென்மார்க் அரசு குடும்பத்தின் வம்சாவளியில் வந்தவர் பிலிப். இவர் கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் 1921 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பதினெட்டாவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்தார். பின்னர் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் காதல் திருமணமாகும். இளவரசர் பிலிப் மகாராணியாருக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகம் முழுவதும் பரவியது.
இவர்களுக்கு திருமணம் முடிந்த பின்னர் சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரே இரண்டாம் எலிசபெத்க்கு பிரிட்டனின் மகாராணியாக மகுடம் சூட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிலிப்பும் எடின்பரோ கோமகன் என அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை பிலிப் மன்னர் என அழைக்கப்படவில்லை. அதற்கான காரணம் அரச குடும்ப இரத்த உறவு உள்ள ஒரு பெண் அரச குடும்பம் அல்லாத அல்லது அரச குடும்பத்தைச் துறந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவரது கணவர் இளவரசர் என்றோ மன்னர் என்றோ அழைக்கப்படமாட்டார்.
அதாவது பிலிப் எலிசபெத்தை திருமணம் செய்துகொள்ளும்போது இளவரசர் என்ற பட்டம் பெறவில்லை. ஆனாலும் மகாராணியார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 1957ஆம் ஆண்டு தனது கணவரான பிலிப்க்கு இளவரசர் என்ற பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார். இதனால் அவர் கடைசிவரை மன்னர் என்று அழைக்கப்படவில்லை. இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு. மேலும் இவருக்கு 8 பேரக்குழந்தைகளும் 10 கொள்ளு பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது அரசு பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அதனால் பிலிப்பும் மகாராணியாரும் தற்போது பொது நிகழ்ச்சிகளில் குறைவாகவே காணப்பட்டுள்ளனர். இளவரசர் பிலிப் கடந்த சில நாட்களாகவே உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சை பின் வீடு திரும்பிய போது லண்டனில் உள்ள வின்ட்சர் கோட்டையில் ராணி எலிசபெத்துடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 9ஆம் தேதி இயற்கை எழுதியுள்ளார். இளவரசர் பிலிப் காலமானதால் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவருடைய உடல் வின்ட்சர் கோட்டையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இறுதிச் சடங்கின்போது பிலிப்பின் ஆசைப்படி ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்கி நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது. இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசையானது நிம்மதியாக தனது வீட்டு படுக்கை அறையில் வைத்து அவருடைய உயிர் பிரிய வேண்டும் என்பதாகும். அதன்படியே அவர் உயிர் பிரியும் போது மகாராணியார் எலிசபெத்தும் அருகில் அமர்ந்திருந்தார்.