திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் முதன்முறையாக பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மரியநாதபுரத்தில் முதன் முறையாக பொதுமக்களுக்கான தடுப்பு சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாம் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு மருத்துவர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன் மற்றும் மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
இதில் கொரோனா தடுப்பூசி அப்பகுதியை சேர்ந்த 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு போடப்பட்டது. இதேபோல் தடுப்பூசி முகாம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்ளிட்ட பிற அமைப்பினர் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.