தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதே நிலைமை நீடித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மக்களே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முழுவதும் 200க்கு அதிகமான கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வர தடை விதிக்கப்படும் என்றும் வேண்டிய பொருட்கள் வீட்டிற்கு வந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.