Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுகாதாரதுறையினரை ஆச்சரியப்படுத்திய கிராமங்கள்… கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய வழி… சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்காத 24 கிராமங்களில் 720 பேருக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரானோ தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். அதன்பின் ஊரடங்கு கொரோனா குறைந்ததால் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொரோனாவை தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ ? என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேநேரம் கொரோனா தொற்று பரவாத பல ஊர்கள் உள்ளது. இது சுகாதார துறையினரை மட்டுமின்றி மக்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. எனவே கொரோனாவை வெல்வதற்கு அங்குள்ள மக்களின் நோய் எதிர்ப்பு திறனை கண்டறிந்தால் புதிய வழி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரத்த மாதிரிகளை கொரோனா பாதிக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சேகரித்து பரிசோதனை செய்யும்படி சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட பகுதிகளில் தமிழகம் முழுவதும் சுகாதார துறையினர் தலா 30 பேருக்கு ரத்த பரிசோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 24 ஊர்கள் உள்ளது. அதில் ரத்தபரிசோதனை எடுக்கும் பணி நான்கு ஊர்களில் தல 30 பேருக்கு நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரத் துறையினர் நேரில் சென்று வீடு, வீடாக ரத்த மாதிரிகளை சேகரித்தனர். அந்த வகையில் சுகாதார மேற்பார்வை அலுவலர் கமாலுதீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டி பகுதியில் பல்வேறு வயதினரை சேர்ந்த 30 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். அதேபோல் தலா 30 பேர் வீதம் 720 பேரிடம் மாவட்டம் முழுவதும் 24 கிராமங்களிலும் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |