Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடுத்தத திருப்பி கேக்க போனேன்..! இப்படி பண்ணிட்டான்… இறைச்சிக் கடைக்காரர் பரபரப்பு புகார்..!!

திண்டுக்கல்லில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட இறைச்சிக் கடைக்காரரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் ஜோசப் ஜான் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வினோத் சகாயராஜ் என்பவர் இவருடைய கடையில் வேலை பார்த்தார். இவர் குடும்ப செலவிற்காக ஜோசப் ஜான்பீட்டர் இடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் வேறு கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜோசப் ஜான்பீட்டர் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு சகாயராஜ் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இது சகாயராஜ்க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜோசப் ஜான் பீட்டரை அவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதில் ஜோசப் ஜான் பீட்டர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் காவல் நிலையத்தில் ஜோசப் ஜான் பீட்டர் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சகாயராஜ் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |