குக் வித் கோமாளி பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி 5 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு, பிக்பாஸ் முகின் ராவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ மற்றும் அறிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, அஸ்வின், தர்ஷா, ரித்திகா, புகழ், பவித்ரா ஆகியோருடன் பிக்பாஸ் 4 பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.