மதுரையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றதில் 24.60 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கியுள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் தேசிய சட்ட பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் வாடிப்பட்டியிலிருக்கும் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் உரிமையியல், குற்றவியல் வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து இதில் உரிமையியலுக்கு 6 வழக்குகளும், குற்றவியலுக்கு 69 வழக்குகளுமாக மொத்தம் 75 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குற்றவியலான விபத்து வழக்கிற்கு தீர்வு காணப்பட்டதில் முதன்மை அமர்வு நீதிபதியான வடமலை 24.60 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கினார். மேலும் இதில் சில முக்கிய நீதிபதிகள் உடனிருந்தனர்.