புதுக்கோட்டை மாவட்டத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் தினத்திற்கு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 9ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது தேரில் புனித செபஸ்தியார் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேரில் பவனி வந்துள்ளார். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.