ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டி யானை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் உணவு தேடி இரவு நேரத்தில் வந்த யானைக்குட்டி ஒன்று அங்கிருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்தது. 15 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து யானையின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார்கள்.
இதையடுத்து அங்கு வந்த மீட்பு படையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு யானை பத்திரமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குட்டியானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது. தொடர்ந்து அதன் நடவடிக்கைகள் கவனிக்கப்படும் என்றும் ஒரிசா மாநில வனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.