Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கவுன்சிலர் வீட்டிலேயே இப்படியா… முகமூடி திருடர்களின் மூர்க்கத்தனமான செயல்… அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

கவுன்சிலர் வீட்டில்  புகுந்த முகமூடி திருடர்கள் அவரை தாக்கி  கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் சென்ற  சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியது. 

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பள்ளத்தூரில் கூத்தலிங்கம் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். இவருடைய மனைவி மீனா என்பவர் அந்த தொகுதியில் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயது உடைய அபிதா என்ற மகளும் 21 வயதுடைய அபிஷேக்  என்ற  மகனும் உள்ளனர். இவர்கள் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவில் மீனா கண்விழித்து வீட்டின் பின் பகுதியில் உள்ள சமயலறைக்கு தண்ணீர் குடிக்க சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று வீட்டின் கதவை தள்ளிக்கொண்டு நான்கு  முகமூடி திருடர்கள் அவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அந்த முகமூடி திருடர்களை பார்த்த மீனா அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் விழித்துக் கொண்டு வந்து பார்த்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவருடைய கணவரை இரண்டு திருடர்கள் இருக்கமாக பிடித்துக் கொண்டனர். அதன் பின்னர் கொள்ளையர்கள் மீனா, அபிஷேக் மற்றும் அபிதா ஆகிய மூவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் மீனாவின் கழுத்தில் அணிந்து இருந்த  10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து 4 பேரும்  தப்பித்து சென்றனர். அதன்பிறகு இச்சம்பவம் குறித்து உடனடியாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி  சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த  போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் மர்ம நபர்களைப் பற்றி வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதனையடுத்து போலீசார் காயம் அடைந்த மூவரையும் பட்டுக்கோட்டையில் இருக்கும்  ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும், ஏற்படுத்தியுள்ளது. மேலும்  இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |