Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டவசமாக தப்பிச்சாச்சு…. மலைப்பாதையில் மரணத்தை சந்திந்த பயணம்… நீலகிரியில் பரபரப்பு…!!

கல்லடி மலைப்பாதை வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் கல்லடி மலைப்பாதை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் வர அனுமதி உண்டு. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஒரு காரில் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

இவர்கள் கல்லடி மலைப்பாதையில் இருக்கும் 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென சுற்றுலா பயணிகளின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணை கல்லடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |