Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு ”செக்”வைத்த ரூல்ஸ்..!… மேட்சும் போச்சு, பணமும் போச்சு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில், சி எஸ் கே அணி பந்து வீச்சிற்கு ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அணியின் கேப்டன் தோனிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

14வது ஐபிஎல் தொடரின்  ,2-வது லீக் போட்டியானது , நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது. இதன்பின் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா -ஷிகர் தவான் கூட்டணி தொடக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை காட்டியது.

இருவரின் கூட்டணியால் டெல்லி அணி முதல் விக்கெட்டிற்குள்  138 ரன்கள் குவித்து வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சிஎஸ்கே எடுத்த  188 ரன்களை, டெல்லி அணி 18.4 ஓவர்களிலேயே, ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில், குறிப்பாக சென்னை அணியின் பவுலிங் ,மிகவும் மோசமாக காணப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி  பவுலிங் செய்ததற்கு, அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அணியின் கேப்டனான தோனிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சீசனில் சிஎஸ்கே -வின்  முதல் போட்டி என்பதால், கேப்டன் தோனிக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே தவறை 2வது முறையாக  செய்தால், கேப்டனுக்கு ரூபாய் 24 லட்சம் அபராதமாகவும் , அணியில் உள்ள வீரர்களுக்கு தலா  6 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும். மூன்றாவது தடவையாக இதே தவறு மேலும் தொடர்ந்தால் ,கேப்டனுக்கு ரூபாய் 30 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதோடு , ஒரு போட்டியில் அவர் விளையாட தடை விதிக்கப்படும். அதோடு அணியில் உள்ள வீரர்களுக்கு தலா ரூபாய் 12 லட்சம் அபராதம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று ஐபிஎல் விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |