Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. இரண்டு குழந்தைகள் ஒன்றாக இருக்கும் சீரியல் நடிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்…!!!

பாரதி மற்றும் கண்ணம்மா தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இச் சீரியலில் கண்ணம்மாவிடம் ஒரு குழந்தையும், பாரதியிடம் ஒரு குழந்தையும் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தனது இரு குழந்தைகளுடன் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |